கொப்பளிக்கும் குருதி!

அக்கினியால் சுட்டாலும்...
அகண்ட வாய் கொண்டென்னை ஏசினாலும்...
குருதி வழிய குடைந்து தீர்த்தலும்!
மனமறுத்து மயங்க மாட்டேன்!
மதி இழந்து வருந்த மாட்டேன்!
மாறாய் சினம் அடக்கி வரம் செய்வேன்!- சாகமாட்டேன்!

பொய்த்திரை பூண்டு..
புகழ் எய்தும் புத்தி - கொடுக்கவில்லை என் தாயும்!
அன்பை அறுத்து ...
பண்பை வளர்க்கும் பாடம் - படிக்கவில்லை நானும்!

சூழ்ச்சிகளில் சிக்கி சூட்சுமங்கள் கற்று..
சுயம்புவாய் சுடர்கின்றேன்!

சூழ்நிலைகள் என்னை சூனியமாக்கலாம்!
சுற்றங்கள் என்மீது குற்றங்கள் சுமத்தலாம்!
கணுக்கால் நரம்பறுத்து என் கனவுகளைக் கட்டலாம்!
கவலை இல்லை!

என் ஆத்மம் ஒன்றே!
அப்புழுக்கற்ற அன்பு!
அறிந்தவர்களுக்கும்-அறைந்தவர்கர்களுக்கும்!
சம அளவு அன்பே!

வாழ்க்கை!
புரியாமல்-தெரியாமல் இருந்து விட்டால் சுகம்!
புரிந்தும் -தெரிந்தும் இருந்து விட்டால்....
நீ பிழையே!

(அன்பே சிவமும்! அன்பே சக்தியும்!
அன்பே ஹரியும்! அன்பே பிரம்மமும்!
அன்பே தெய்வமும்! அன்பே மனிதரும்!
அன்பே சத்தியம்! அன்பே நிதியம்!
அன்பே சந்தம் ! அன்பே ஆனந்தம்!
அன்பே மௌனம் ! அன்பே மோட்சம்!
அன்பே நீயும்! அன்பே நானும்!
ஆக்கம் - கந்த குரு கவசம்)

அன்புடன்

கோ கோ

Comments

Popular posts from this blog

அவளும் நானும்!

தனிமை ஒரு வரம்!

இருப்பின் கனம்!