Posts

Showing posts from December, 2017

இருப்பின் கனம்!

வழி தொலைந்த பாலைவனத்தில்.. நா வற்ற.. நாளம் வற்ற.. முற்றும் போகும் ஒற்றை நொடி முன் கண்ணில் படும் கானல் குளம்.. உயிர்- இருப்பின் கனம்! உள்ளம் கலந்தவள்.. உயிரைக் கடந்தவள்.. கவிஞன் அவனென்று காதலும் துறந்தவள்.. கண்டவன் கைகோர்த்து குண்டமும் எரிக்கையில்... வெந்திடும் விறகோடு அவன் விரகமுமே! காதல் - இருப்பின் கனம் ! சிறுவயதில்.. இடுப்பை விட்டு இறங்காத மகன்.. பெருவயதில்.. இடுப்பை உடைத்து மூலையில் வீச.. விம்மிய தாயின் வழிந்த கண்ணில்... கருணை- இருப்பின் கனம்! கோ கோ

நான் தொலைத்த வெள்ளையன்!

பக்கத்துக்கு வீட்டுப் பாப்பாத்தி.. படபடத்து சத்தம் போட.. அலறி அடிச்சு அம்மாவும் நானும் ஓட... எடுத்து விசுறுனா ஒரு மரப்பெட்டி.. எட்டிப்பாத்தா 6-7 பூனைக்குட்டி! ஒளிஞ்சு பாத்த அம்மா.. ஒருநிமிசம் ஓயாம .. ஒவ்வொண்ணா கவிகிட்டு மரப்போருக்கு ஓட.. எனக்குப் புடிச்ச வெள்ளகுட்டியோட.. விசுக்குனு வீடு வந்துட்டேன்! அட்டைபெட்டி வீடொன்னும்.. அரலிட்டர் பாலென்னும்...ஆசையா வளந்த வெள்ளையன்.. அசைவத்துக்கு ஆசைப்பட்டு...பெருச்சளியை கவ்வுனதும்.. அம்மா அதட்ட..மனசே இல்லாம.. தூரத்து குட்டையில கொண்டுபோய் விட்டுபுட்டு! வீடு வந்து சேர்ந்தேன் அனாதையாக! அப்ப அப்ப... பாப்பாத்தி சத்தம் போட்டா.. வெள்ளையன் வந்து போவான்.. யாருக்கும் தெரியாம- என் நெஞ்சுக்குள்ள! கோ. கோ