Posts

Showing posts from 2015

தனிமை ஒரு வரம்!

Image
இது உரங்களின் உறைவிடம்!!!!!! உணர்வுகளை...... ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்த உகந்த தருணம்..... அடங்காது திரியும்  நம்  மடங்காத மனதை  மயக்கும் மந்திரம்!!!!!! உன்னை உனக்கே ஒளித்திரை இட்டு உன் விழித்திரை திறக்கும் விலாசப்படிகம்!!!!!!! இயல்பை மீறிய  ஏகாந்தம் அடைய  இதுவே முதல் பாடம்!!!!!!!  உறவுகள் மாயை என  இதன்  இரவுகள் உணர்த்தும்!!!!! மாற்றம் நிகழ இதுவே மருந்து....  நீ ஏற்றம் அடைய  உடனே இதை அணுகு!!!!! சிறகுகளை விரிப்ப்போம் !!!! சரித்திரம் படைப்போம்!!!!                                                                                                                                                                                                                                                                                   கோ கோ

வெட்டியான் விதி!

                                                                                                         நட்ட நடு   சாலையில் நசுங்கிக் கிடந்து ….. பட்ட வினையால்… புழுவேறிய மட்டப்பிணங்களயும்.... தொட்டு மரியாதையுடன் தூக்கி துணிவாய் தகனம் செய்பவன்! இன்று….. உச்சி வெளுத்து உடம்பிளைத்து ஊருக்கு வெளியே... ஓசைஇன்றி….. அவனுக்காய்….. ஓலமிட ஆளில்லை மாரடித்து கண்ணீர் சிந்த மங்கை இல்லை ... பாடைகட்டி… பறை தட்டி…   மேடை ஏற்ற மானிடரே இல்லை… குருதிக்கு தீ மூட்டி…. இறுதிக்கு வழிகாட்ட ஈசனும் இல்லை….   நல்லடக்கம் செய்தவன் நல்லவனே ஆயுனும்….. நாறித்தான் போகிறான்… புழு வுண்ட மனித மனங்களால்!!!!!

இனி கலாம் கனவு நமது கண்களில்!

கலாமை காலம் விழுங்கிவிட்டது!!! அக்னிசிறகின்று ஆகாயம் அடைந்து விட்டது!!! விஞ்ஞானம் அறிந்த ஒரே மெய்ஞானி மறித்துவிட்டார்!!! இரண்டாம் பாரதி இறந்துவிட்டார்!!! இஸ்லாமிய விவேகானந்தர் வீழ்ந்துவிட்டார்!!! ஏழ்மையில் எழுந்து... வலி'மையால் விளைந்து... எளிமையால் ஏற்றம் பெற்றவரே!!! அகம் வெளுத்து அன்புதழைக்க அறமாய்.. அன்புச்சரமாய் மொழிந்தவரே!!! சௌரீகச் சக்கரத்தில்  சு(ம)ருண்டு கிடந்த மூளை(களை) சலவை செய்து சாரம் சொன்னவரே!!! வழி தொலைத்து விழிபிதுக்கி மதியிழக்கும் போதெல்லாம் கரம் பிடித்து கரை சேர்த்தவரே!!! ஏவுகனைக்கு மட்டுமில்லாது எங்களுக்கும் உந்து விசை கொடுத்தவரே!!! இலக்கையடைய இலக்கணம் தந்தவரே!!! எங்கள் கண்களைத்திறந்து கனவுகானசொல்லிவிட்டு..... உம்-கண்களை மூடிக்கொண்டீரே!!! இமையமும் சிறியது உம்தன் எளிமைக்கு முன்னால்!!! இளைஞர்களின் எழுச்சியே!!! நீவீர் என்றும் வாழ்வீர் எங்கள் நெஞ்சினுள் அக்னிக்குஞ்சாய்!!! என் தேசமே!!!எழுந்துவா!!!  இனியாவது நிமிரிந்திடு!!! வாருங்கள் இளைஞர்களே!!!ஒன்றுசேருங்கள்!!! கலாம் கனவு நனவாக கண்களை அகல விரித்து கனவுகானுவோம் -நாம்!!!