அவளும் நானும்!

அடடா...
எத்துணை அழகு!

அவளுக்கு கூட கிடையாது..
இதனை மச்சங்கள்!

கருப்பு உடலில்..
வெள்ளை வெள்ளையாய்!
கொள்ளை கொள்ளையாய்!

அது என்ன ?
ஒன்றுமட்டும்..
ஒரு விதமாய்- பதமாய்..
ஒவ்வொருநாளும் உருமாறுகிறதே!

முக்கால் வளர்ந்த பாகத்தை
நாளை..
நன் முழுதாய் காணலாமா?
காலமே பதில் சொல்லையா!

சூரியனே!
சீக்கிரம் வடக்கு நோக்கி விரைந்து போ!
அடக்கமாய் உறங்கும்
கருப்பையை
இங்கு கடத்தி வா!

வட்டழகுக் கன்னி..
இன்று எனக்குத்தான்!

வந்துவிட்டாயா!

மாமனைக்கான..
மஞ்சள் புசிக்குளித்து..
மங்கலமாய் வந்தாயோ?

கருப்பு வண்ண சேலையை..
அங்கமெல்லாம் சுற்றியும்...
உன் அழகெல்லாம்
அப்படியே தெரியும்..
மாயமென்ன?

கன்னம் சிவக்கதே..
இங்கு
எவரும் விழித்திருக்கவில்லை!
விடியும் வரை..
விருந்துண்ண இருப்பது..
என்
விழிகள் மட்டுமே!

முகிலிழுத்து..
முலைகள் மூடாதே..
மாமன் உடனிருக்க..
எதுவும் நினையாதே!

தொட்டுவிடத்தான்..
நெடுங்கலாம் முயற்சிக்கிறேன்..
தொடபாடில்லை!
உன்னை கட்டியணைக்கத்தான்..
காற்றிலே பறக்கிறேன்...
அடைந்தபாடில்லை!

நெருங்க நெருங்க..
விலகிச்செல்கிறாய்!
நெஞ்சம்..
நொறுங்க நொறுங்க..
நகர்ந்து கொள்கிறாய்!

உன்
காது கடித்து
என்
காதல் சொல்ல!

உன்
மோகமுடைத்து
என்
தாகம் தீர!

நம்
இதயம் கோர்த்து..
இவ்வுலகம் ஆழ!

காற்றாய் வருவேன்!

கன்னி 'நிலவே'!



கோ. கோ

Comments

Popular posts from this blog

தனிமை ஒரு வரம்!

இருப்பின் கனம்!