பைத்தியக்காரன்!


எரித்த பூவை கையில் வைத்துக்கொண்டு..
என் இதயத்தைக் கேட்கிறேன்...
என்னவள் எங்கே?

நானே வெறுத்தாலும்..என்னை பொறுத்து-ஆளும்!
என்று சொன்ன என்னவள் எங்கே?

உலகமே உம்மை எதிர்த்தாலும்..உம் திலகமாய்..
உடனிருந்து கரம் பிடிப்பேன்!
என்று சொன்னவள் எங்கே?

மதி இழந்து..பிழை செய்து..விழி பிதுங்கி வீழும் முன்.
என் விரல் கொடுத்து மீட்பேன்..
என குரல் கொடுத்தவள் எங்கே?

என்னைப் பெற்றவளை...
எனக்குப் பெற்றுத்தருவேன்...என பாடம் சொன்ன
என்னவள் எங்கே?

எறிந்த பூவின் எச்சம்..
என் இதயத்தை பொசுக்கும் நேரம்!
உன் முழியான் கண் வழி வழியும் துளி ஒன்றும்!
குழந்தை குறுநகை ஒன்றும்!
கொண்டு வா!

நம் அன்பின் ஆழி!
எதுவென..
அகிலம் உணரட்டும்!
……………
முள்ளை
முத்தமிட்டு..முல்லை என்ன
சொல்லிக்கொண்டேன்!

பைத்தியக்காரன்!


கோ கோ

Comments

Popular posts from this blog

நான் தொலைத்த வெள்ளையன்!

அவளும் நானும்!