Posts

Showing posts from 2016

பணம்!

நெடுங்காலம் போராடி ... வென்று விட்டேன்...நான்! உதிரம் இருந்தும் ...   உறைந்துபோன என் எழுதுகோலை ... எழுப்பிவிட்டேன் ! பூட்டிக்கிடந்தது ... மைக்குச்சியின் மூக்கு மட்டும் அல்ல ! என் மனதும்தான் ! என் எண்ணங்களுக்கு இன்று விடுதலை ! விழுந்த இடத்தில தானே எழ முடியும் ? எழுந்துவிட்டேன் நான் ! மதியை மறைத்திருந்த விதியை துறந்துவிட்டேன் .. அல்ல துரத்திவிட்டேன் ! சுருங்கிக்கிடந்த என் மூளைக்கு .. இது நல்லதொரு சலவை தான் ! அழுக்குடன் ... அழுகையும் .. தொலைந்து போனதால் ! ஓட்டை உடைத்துக்கொண்டு ... உலகத்தை   எட்டிப்பார்க்கிறேன் ... அட .. நாற்றம் பொறுக்க வில்லை ! மகேசனும் மக்கிப்போவான் .. மனித எச்சங்களால் ! மர நிழலை .. மண்ணுக்குள் புதைத்து விட்டு .. அலுமினியக் கூரையினுள் ... அடைக்கலம் தேடும் .. அதிசியக் கூட்டம் ! உலை கொதிக்கும் வரை ... பொறுமை இல்லை .. அரிசியை .. அப்படியே அரைத்துண்ணும் மனிதப் பிணங்கள் ! அய்யோ .. அரைகூவல்கள் .. அதிகமாய் இருக்கிறதே .. ஆதிக்காலம்