Posts

Showing posts from October, 2017

பைத்தியக்காரன்!

எரித்த பூவை கையில் வைத்துக்கொண்டு .. என் இதயத்தைக் கேட்கிறேன் ... என்னவள் எங்கே ? நானே வெறுத்தாலும் .. என்னை பொறுத்து - ஆளும் ! என்று சொன்ன என்னவள் எங்கே ? உலகமே உம்மை எதிர்த்தாலும் .. உம் திலகமாய் .. உடனிருந்து கரம் பிடிப்பேன் ! என்று சொன்னவள் எங்கே ? மதி இழந்து .. பிழை செய்து .. விழி பிதுங்கி வீழும் முன் . என் விரல் கொடுத்து மீட்பேன் .. என குரல் கொடுத்தவள் எங்கே ? என்னைப் பெற்றவளை ... எனக்குப் பெற்றுத்தருவேன் ... என பாடம் சொன்ன என்னவள் எங்கே ? எறிந்த பூவின் எச்சம் .. என் இதயத்தை பொசுக்கும் நேரம் ! உன் முழியான் கண் வழி வழியும் துளி ஒன்றும் ! குழந்தை குறுநகை ஒன்றும் ! கொண்டு வா ! நம் அன்பின் ஆழி ! எதுவென .. அகிலம் உணரட்டும் ! …………… முள்ளை முத்தமிட்டு .. முல்லை என்ன சொல்லிக்கொண்டேன் ! பைத்தியக்காரன் ! கோ கோ

கொப்பளிக்கும் குருதி!

அக்கினியால் சுட்டாலும் ... அகண்ட வாய் கொண்டென்னை ஏசினாலும் ... குருதி வழிய குடைந்து தீர்த்தலும் ! மனமறுத்து மயங்க மாட்டேன் ! மதி இழந்து வருந்த மாட்டேன் ! மாறாய் சினம் அடக்கி வரம் செய்வேன் !- சாகமாட்டேன் ! பொய்த்திரை பூண்டு .. புகழ் எய்தும் புத்தி - கொடுக்கவில்லை என் தாயும் ! அன்பை அறுத்து ... பண்பை வளர்க்கும் பாடம் - படிக்கவில்லை நானும் ! சூழ்ச்சிகளில் சிக்கி சூட்சுமங்கள் கற்று .. சுயம்புவாய் சுடர்கின்றேன் ! சூழ்நிலைகள் என்னை சூனியமாக்கலாம் ! சுற்றங்கள் என்மீது குற்றங்கள் சுமத்தலாம் ! கணுக்கால் நரம்பறுத்து என் கனவுகளைக் கட்டலாம் ! கவலை இல்லை ! என் ஆத்மம் ஒன்றே ! அப்புழுக்கற்ற அன்பு ! அறிந்தவர்களுக்கும் - அறைந்தவர்கர்களுக்கும் ! சம அளவு அன்பே ! வாழ்க்கை ! புரியாமல் - தெரியாமல் இருந்து விட்டால் சுகம் ! புரிந்தும் - தெரிந்தும் இருந்து விட்டால் .... நீ பிழையே ! ( அன்பே சிவமும் ! அன்பே சக்தியும் ! அன்பே ஹரியும் ! அன்பே பிரம்மமும் ! அன்பே தெய்வமும் ! அன்பே மனிதரும் !