வெட்டியான் விதி!


                                                                                                       
நட்ட நடு  சாலையில் நசுங்கிக் கிடந்து…..
பட்ட வினையால்…
புழுவேறிய மட்டப்பிணங்களயும்....
தொட்டு
மரியாதையுடன் தூக்கி
துணிவாய் தகனம் செய்பவன்!
இன்று…..
உச்சி வெளுத்து
உடம்பிளைத்து
ஊருக்கு வெளியே...
ஓசைஇன்றி…..
அவனுக்காய்…..
ஓலமிட ஆளில்லை
மாரடித்து கண்ணீர் சிந்த மங்கை இல்லை ...
பாடைகட்டி…
பறை தட்டி…
 மேடை ஏற்ற மானிடரே இல்லை…
குருதிக்கு தீ மூட்டி….
இறுதிக்கு வழிகாட்ட ஈசனும் இல்லை….
 
நல்லடக்கம் செய்தவன்
நல்லவனே ஆயுனும்…..
நாறித்தான் போகிறான்…
புழு வுண்ட மனித மனங்களால்!!!!!

Comments

Popular posts from this blog

அவளும் நானும்!

தனிமை ஒரு வரம்!

இருப்பின் கனம்!